பாடசாலை பேருந்தில் தீ விபத்து: 25 பேர் பலி
தாய்லாந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பாடசாலை சுற்றுலாவிற்காக சென்ற பேருந்தில் 44 மாணவர்களை ஏற்றிச் சென்றதாக போக்குவரத்து அமைச்சர் சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பேருந்தில் பயணித்த 44 பேரில் தற்போது வரை 25 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பேருந்தின் சாரதி உயிர் பிழைத்ததுடன் தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்