அதிபரின் நடவடிக்கைகளை எதிர்த்து பாடசாலையின் முன்னால் திரண்ட பெற்றோர்கள்
சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கமு/சது இஸ்மாயில் வித்தியாலயத்தில் அதிபரின் நடவடிக்கைகளை எதிர்த்து பெற்றோர்கள் பாடசாலை முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் ஒன்று கூடினர்.
இதன் போது, குறித்த இடத்திற்கு வருகைதந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர் பெற்றோர்கள் ஒன்று கூடியத்திற்கான காரணங்களை கேட்டறிந்து சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளரிடம் எடுத்துக் கூறினார்.
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் பீ.எம்.வை. அறபாத் மற்றும் சம்மாந்துறை கோட்டக் கல்வி பணிப்பாளர் என்.எம். நாசிர் அலி ஆகியோர் குறித்த பாடசாலைக்கு முன்னால் ஒன்றுகூடிய பெற்றோர்களுடன் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இப்பிரச்சினை சம்மந்தமாக எதிர் வரும் வெள்ளிக்கிழமை வலயக்கல்வி அலுவலக அதிகாரிகளினால் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பாடசாலை முன்னால் ஒன்றுகூடிய பெற்றோர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்