அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணை நாளை வெள்ளிக்கிழமை முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
- Advertisement -
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், முதல் பாடசாலை தவணை வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் பாடசாலை தவணை ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பமாகும்.
- Advertisement -