பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு!

பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த குடும்பஸ்தர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர், பெண்ணொருவருடன், நேற்று வெள்ளிக்கிழமை மாலை,  அங்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.

ஓட்டமாவடியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM