பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு நீச்சல் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு ஸ்விம் பற்றி ஸ்விம்மிங் அகடமி (Swim Batti Swimming Academy) மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை வெபர் மைதானத்தில் உள்ள நீச்சல் தடாக வளாகத்தில் இடம்பெற்றது.

கனடாவை வசிப்பிடமாக கொண்ட லீனா மைக்கல் சுபேந்திரா மற்றும் சிவசுப்பிரமணியம் பிரதிபிராஜ் ஆகிய இருவரும் கனடா அரசாங்கத்தின் அமைப்பான டொரன்டோ எம்.பி.பி சென்டரிடமிருந்து பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்று கொடுத்திருந்தனர்.

அவற்றை குறித்த மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன் மற்றும் பொறியியலாளர் தெய்வேந்திரராஜா ஸ்விம் பற்றி ஸ்விம்மிங் அகடமி நிர்வாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்