பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு : 20 பேர் பலி!
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயம் அடைந்தனர்.
ரயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்குச் சற்று முன்னதாக குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குண்டு வெடிப்பு ஏற்பட்ட போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டுக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.