பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்திட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வந்தன.

இந்த நிலையில், பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 90 நாள்களுக்குள் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.