பழச்சாற்றில் கலக்கப்பட்ட சிறுநீர்: வைரலாக பரவும் காணொளி
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்ட வீதியோர பழச்சாறு கடை ஒன்றில் அதன் உரிமையாளரினால் பழச்சாற்றுடன் சேர்ந்து சிறுநீர் கலக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த கடையின் உரிமையாளரும் அதில் பணிபுரியும் 5 வயது சிறுவனையும் அப்பகுதி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடையில் பழச்சாறை அருந்த வந்த வாடிக்கையாளர்கள் சிலர் அதில் மஞ்சள் நிறத்தில் காணப்பட்ட திரவம் தொடர்பில் சந்தேகம் அடைந்து அருகில் இருந்த பொலிஸ் நிலையத்தில் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த கடைக்குள் நுழைந்த பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளதுடன் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்டிருந்த சிறுநீரையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.