பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மேலும் பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்