பல் சிகிச்சையால் மாரடைப்பு: ஒருவர் மரணம்

சீனாவின் ஜெஜயாங் பகுதியில் பல் சிகிச்சை மேற்கொண்ட நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நபருக்கு ஒரே நாளில் 23 பற்களை அகற்றி, 12 பற்களை மீண்டும் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் 13 நாட்களின் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த நபருக்கு ஒரு பல்லினை பொருத்துவதற்கு இலங்கை மதிப்பில் 60,920 ரூபாய் வரையில் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.