பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் திறக்கப்படும்
ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (எப்எஸ்பி) மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் ஜனதா விமுக்தி பெரமுனவைச் சேர்ந்த மாணவர்கள் குழுவிற்கும் கலைப் பீடத்தில் கல்வி கற்கும் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து மாணவர்களையும் வியாழக்கிழமை மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
நிலைமை மோசமடைவதைத் தவிர்ப்பதற்காக பல்கலைக்கழகத்தை மூட நிர்வாகம் தீர்மானித்துள்ளதாகவும், தேர்தலுக்காக அடுத்த வாரம் மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த விடுமுறை வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்