பற்பசைக்குள் போதைப்பொருள்: சிறைக்கு எடுத்து சென்ற இருவர் கைது

பற்பசைக்குள் போதைப் பொருளை மறைத்து வவுனியா சிறைச்சாலைக்கு எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டு நேற்று சனிக்கிழமை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவருமே சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவரை பார்வையிட வந்த இருவரே இவ்வாறு சூட்சுமமாக போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க