பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
எதிர்வரும் 14ஆம் திகதியன்று, சான்றிதழ் விநியோகிக்கும் ஒருநாள் சேவை மற்றும் நிகழ்நிலை சேவை என்பன இடம்பெறமாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய கடமைகளுக்காகத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதேநேரம், நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக நாரஹேன்பிட்டியவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களமும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்