பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை 5 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்கப்படும்

சிறுபோக பருவத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானைகளால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி முடிக்கப்படும் என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிவித்துள்ளது.

தற்போது, 80 சதவீதமான விவசாயிகளுக்கு 80 மில்லியன் ரூபாய் வரையில் இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளது. ஏனைய விவசாயிகளுக்கு எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த இழப்பீட்டுத் தொகையை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலங்கள் சேதமடைந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதென விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்