பயணிகள் வாகனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் – 41 பேர் பலி

பாகிஸ்தானில் பயணிகள் வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள குர்ரம் (Kurram) எனும் பழங்குடியின மாவட்டத்தின் வழியாகப் பயணித்த வாகனங்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்குவதுடன், இந்த சம்பவத்தில் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், துப்பாக்கிதாரிகள் முதலில் வாகனங்களில் பயணித்த பொலிஸாரை குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்