பப்பாளிப் பழத்ததுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்

பப்பாளிப் பழத்ததுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்

பப்பாளிப் பழத்ததுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்

🟠⚫பப்பாளி பழம் என்பது கிட்டத்தட்ட எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடிய ருசியான ஒரு பழம். பெரும்பாலான நபர்களுக்கு பப்பாளி பழம் மிகவும் பிடிக்கும். அதிக நார்ச்சத்து, குறைந்த கிளைசிமிக் எண், இனிப்பான சுவை, அற்புதமான நிறம் மற்றும் பல்வேறு ஆரோக்கிய நலன்கள் தரக்கூடியது பப்பாளி பழம்.

🟠⚫செரிமானத்தை மேம்படுத்துவது முதல் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்களின் உறிஞ்சுதலை அதிகப்படுத்துவது வரை இந்த பப்பாளி பழம் நமக்கு பல்வேறு விதத்தில் நன்மைகளை அளிக்கிறது. ஆனால் இந்த பப்பாளி பழத்தை ஒரு சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம். அது என்ன மாதிரியான உணவுகள் என்பதை இக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

🍐புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் சுவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் அமைகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் அவை பப்பாளி பழத்துடன் சேரும்பொழுது அதனால் செரிமானம் சீர்குலைக்கப்பட்டு, ஒரு சில குடல் சார்ந்த பிரச்சனைகள் எழுகிறது.

🍐காரமான உணவுகள் பப்பாளி பழத்துடன் சேரும்பொழுது வயிறை எரிச்சலடைய செய்து செரிமான பிரச்சனைகளை மோசமாக்கலாம்.

🍐பப்பாளியில் உள்ள பப்பைன் மற்றும் கீமோபப்பைன் ஆகிய என்சைம்கள் பாலை திரிய வைத்து, பால் சார்ந்த பொருட்கள் செரிமானமாவதை பாதிக்கிறது. எனவே பப்பாளி பழத்தை பால் அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடும் பொழுது உடனடியாக அது வயிற்று உப்புசம், வாயு அல்லது வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

🍐பப்பாளி என்பது குறைந்த கொழுப்பு கொண்ட ஒரு பழம். இதனை பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த இறைச்சிகள் போன்ற அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளோடு சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் உண்டாகும். அதாவது வயிற்று உப்புசம் அல்லது செரிமானமின்மை போன்றவை ஏற்படலாம். கொழுப்பு மற்றும் பப்பாளி பழத்தின் செரிமான விகிதங்கள் எதிரெதிராக இருப்பதால் இது ஏற்படுகிறது.

🍐சிட்ரஸ் பழங்கள் பப்பாளி பழத்துடன் சேரும்பொழுது அசிடிட்டி அல்லது நெஞ்செரிச்சல் உண்டாகலாம். எனவே முடிந்த அளவு சிட்ரஸ் பழங்களை பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் அது அசௌகரியம், வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு போன்றவற்றை உண்டாக்கலாம்.

🍐பப்பாளி பழத்தில் உள்ள என்சைம்கள் புரதத்தை உடைத்து ஒரு சில அதிக புரத உணவுகளின் செரிமானத்தில் குறிக்கிடுகிறது. எனவே பப்பாளி பழத்தை அதிக அளவு இறைச்சி, மீன்  போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் அல்லது அசௌரியங்கள் ஏற்படலாம்.

🍐எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் தக்காளி என இவை அனைத்தும் அமிலத்தன்மை அதிகம் நிறைந்த உணவுகள் பப்பாளி சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

🍐பப்பாளி சாப்பிட்ட பின்னர் வெள்ளரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து காணப்படுவதால் இது வாயு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதக விளைவைக் கொடுக்கும்.

🍐பப்பாளி சாப்பிட்ட உடன் பாகற்காய் சாப்பிடவே கூடாது. பப்பாளியில்  நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். ஆனால் பாகற்காய் உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சும்.  இந்த கலவையானது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

பப்பாளிப் பழத்ததுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்