பதுளை – மஹியங்கனை வீதியில் நேருக்கு நேர் மோதிய லொறிகள்

-பதுளை நிருபர்-

பதுளை – மஹியங்கனை வீதியில் கரமட்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை பயணித்த இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயமடைந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரமட்டிய ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மிகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின்போது இரண்டு லொறிகளும் பலத்த சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.