பதுளை பசறை வீதியில் வெவ்வேறு இடங்களில் வீதி விபத்துக்கள்

-பதுளை நிருபர்-

பதுளை பசறை பிரதான வீதியில் வெவ்வேறு இடங்களில் நேற்று புதன்கிழமை இரவு வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பசறை வீதியில் 10 ஆம் கட்டைக்கு அருகாமையில் பதுளையில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த லொறி ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான போது லொறியில் சாரதி மாத்திரமே பயணித்ததாகவும் இருப்பினும் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பசறை பதுளை வீதியில் 5 ஆம் கட்டைப் பகுதியில் பசறையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பார ஊர்தி ஒன்று வீதியை விட்டு விலகி வீதியின் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கடவையில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளது.

இவ்விரு விபத்துக்கள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்