பதுளை-செங்கலடி பிரதான வீதி போக்குவரத்து 4 ஆவது நாளாகவும் தடை!
-பதுளை நிருபர்-
பதுளை செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ம் கட்டை பகுதியில் போக்குவரத்து 4 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.
கடந்த 18 ம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியில் விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.
இருப்பினும் சீரற்ற காலநிலை யிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் கற்களை அகற்றும் பணிகளில் தொடர்ந்தும் நான்காவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் பயணிகள் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதுடன் இன்னும் ஓரிரு நாட்களில் கற்களை அப்புறப்படுத்தி வீதியை போக்குவரத்துக்கா திறக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.