பதுளையில் 10 ஏக்கர் மலை பகுதி தீக்கிரை

பதுளை சொரணதொட்டை மலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட தீயினால் 10 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.

சொரணதொட்டை முதியோர் இல்லத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மலையில் திடீரென தீ பரவியதாகவும், நிலவும் வறட்சியான காலநிலையால் காட்டுப்பகுதியில் தீ வேகமாக பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் வறண்ட காலநிலையால் மலையில் தீப்பிடித்திருக்கலாம் எனவும் யார் மீதும் சந்தேகிக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.