பதுளையில் பாரிய விபத்து : 4 பேர் பலி!

-பதுளை நிருபர்-
பதுளை சொரணதொட்ட வெலிஹிட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் லொறியொன்று வீதியில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு காயமடைந்த மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்