பதவி விலகத் தீர்மானித்த இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு அண்டன் ரூக்ஸ் தீர்மானித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி தாம் இந்த முடிவை எடுத்ததாக தமது எக்ஸ் தளத்தில் அவர் அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அண்டன் ரூக்ஸ், கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இணைந்தார்.

அவர் இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் மார்வெல்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக இருந்தநிலையில், இந்த வார இறுதிக்குள் அண்டன் ரூக்ஸ் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.