சுக்கிர பகவானின் கன்னி ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அற்புதமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
சுக்கிர பகவான் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சிம்ம ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிர பகவான் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் திகதி அன்று புதன் பகவானின் கன்னி ராசியில் பயணத்தை தொடங்க உள்ளார். வருகின்ற செப்டம்பர் 18ஆம் திகதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.
சுக்கிர பகவானின் கன்னி ராசி பலன் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அற்புதமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
ரிஷப ராசி
உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசிகள் 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார் அதனால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நண்பர்களின் முழு ஆதரவும் முழுமையாக கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள தொகைகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண மாணவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மகர ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். இலக்குகளை எளிதில் அடையக்கூடிய சூழ்நிலைகள் அமையும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்