பண்ணையாளர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பட்டி பொங்கல் நிகழ்வு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உறுகாமத்தில் பண்ணையாளர்களின் ஏற்பாட்டில் இன்று புதன் கிழமை பட்டி பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அதிதியாக கலந்து கொண்டதோடு, கட்சியின் முக்கிய உறுப்பினர்களும், பண்ணையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உழவர் பெருமக்கள் கடவுளாக செல்வமாக கருதும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பட்டிப்பொங்கல் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Minnal24 வானொலி