பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தென்னாபிரிக்க பெண் ஒருவர் கைது!
போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதான தென்னாபிரிக்க பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் தமது பயணப் பையில் 4 தசம் 068 கிலோ கிராம் கொக்கெயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 142 மில்லியன் ரூபாய் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
- https://minnal24.com/wp-admin/index.php
- செய்திகள்
- நிகழ்வுகள்
- உலக செய்திகள்
- Videos