பணக்கார நடிகர்களின் பட்டியல்

உலகளவில் உள்ள பணக்கார நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தப் பட்டியலில் பிரபல நடிகர்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர்.

இதில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10 ஆவது இடத்தில் ஜாக்கி சான் காணப்படுகிறார்.

இதேவேளை உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் காணப்படுகிறார்.

அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 1.49 பில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்திய பொலிவுட் நடிகர் ஷாருக்கான் நான்காவது இடத்தில் காணப்படுகிறார்.

இந்திய பொலிவுட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக வேதனம் பெற்றுக்கொள்ளும் நடிகராக ஷாருக்கான் இருக்கிறார்.

ஷாருக்கானின் சொத்து மதிப்பு 876.5 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்படுகிறது.

முதல் 10 பணக்கார நடிகர்களின் பெயர் விபரங்கள் கீழே…

01. அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்

02. டுவைன் “தி ராக்” ஜான்சன்

03. டோம் குரூஸ்

04. ஷாருக்கான்

05. ஜோர்ஜ் க்ளூனி

06. ரொபர்ட் டி நிரோ

07. பிரட் பிட்

08. ஜாக் நிக்கோல்சன்

09. டொம் ஹாங்ஸ்

10. ஜாக்கி சான்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்