பட்டிருப்பு-போரதீவு பிரதான வீதியை திருத்தியமைக்கும் பணிகள் ஆரம்பம்

 

மட்டக்களப்பில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சேதமடைந்த வீதிகளை திருத்தியமைககும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, போரத்தீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பட்டிருப்பு-போரதீவு பிரதான வீதியானது, வெள்ளத்தில் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், அதனை சீர் செய்து திருத்தியமைக்கும் பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்தது.

வெல்லாவெளி-மண்டூர் பிரதான வீதிக்கு குறுக்காக பாயும் நவகிரி குளம், அதிகளவில் பெருக்கெடுத்தமையால் வாகனங்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறித்த வெள்ளப்பெருக்கானது, கார்ப்பெட் வீதிகளை உடைத்து அருகில் உள்ள வயல் நிலங்களுக்கு தூக்கி வீசியிருந்ததை, அவதானிக்க முடிகின்றது.

எனினும், பல சிரமங்களுக்கு மத்தியில் குறித்த வீதியால் தினமும் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலர் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது குறித்த வீதி திரு;தியமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.