பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக  கிம்புலாபிட்டியில் சிறிய அளவில் பட்டாசு மற்றும் கேளிக்கை வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இம்முறை பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் மக்கள் இவ்வாறு கேளிக்கை வெடிபொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வமின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.