Sri Lanka Tamil News Site

“படித்தவுடன் கிழித்து விடவும்” மாணவிக்கு ஆசிரியரின் காதல் கடிதம்

- Advertisement -

ஆசிரியர் ஒருவர் தனது பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து மடல் ஒன்றை கொடுத்து அதில் உள்ள செய்தியை படித்தவுடன் கிழித்து விடவும் என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜ் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணிபுரியும் 47 வயதான ஆசிரியர் , இவர் புத்தாண்டு விடுமுறைக்கு முன்பாக டிசம்பர் 30ஆம் திகதி பாடசாலையில் வைத்து இந்த கடிதத்தை கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு சென்று அதை படித்து பார்த்த போது தான் மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியர் மாணவிக்கு 12 வரிகளில் காதல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

- Advertisement -

அந்த ஆசிரியர் கடிதத்தில், “நான் உண்மை உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். விடுமுறை நாள்களில் உன்னைப் பிரிந்து வாடுவேன். எனவே, நேரம் கிடைக்கும் போது என்னைத் தொடர்பு கொண்டு அழைத்து பேசு. முடிந்தால் நேரில் வந்து பார். நீ என்னை உண்மையாக காதலித்தால் நிச்சயம் பார்ப்பாய்” என்று எழுதியுள்ளார்.

கடைசியாக இந்த கடித்தத்தை ” படித்தவுடன் கிழித்து போட்டுவிடு” , யாரிடமும் காட்ட வேண்டாம் என்றும் அதில் எழுதியுள்ளார்.

இதை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் விவரத்தை கூறி, ஆசிரியரிடம் சென்று விசாரித்துள்ளனர்.

இதையடுத்து ஆசிரியர் பொற்றோரை மிரட்டியதையடுத்து பொற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

- Advertisement -