படலந்த அறிக்கை மீதான விவாதம் இன்று

“பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

மேலும் மே மாதத்தில் மற்றொரு நாளை இரண்டாவது நாளாக விவாதத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

படலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வுக்கு பின்னர், அடுத்த பாராளுமன்ற அமர்வு மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க