
படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி
லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் சட்ட விரோதமாகக் குடியேற முற்பட்டபோதே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 பேர் குறித்த படகில் பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையில் 37 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.