பசறை டெமேரியா பகுதியில் வேருடன் சாய்ந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு
-பதுளை நிருபர்-
சீரற்ற காலநிலையின் காரணமாக அதிகளவிலான காற்றினால் இன்று காலை பசறை டெமேரியா பகுதியில் பாரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்து வீதியில் விழுந்துள்ளது.
இதனால் தேயிலை கொழுந்து பதப்படுத்தும் கட்டிடம் மற்றும் சிகை அலங்கார நிலையம் என்பன பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பசறை பகுதியில் இருந்து டெமேரியா, மஹத்தன்ன, மீரியபெத்த, தம்பேவெல ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த மரத்தினை அகற்றும் பணிகளை ஊர் மக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.