நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்-

சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவும், புனித ரமழானை முன்னிட்டும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் வேண்டுகோளின் பேரில் சீன தூதரகத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கான உலருணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளருமான யூ.எல்.என். ஹுதாவின் தலைமையில் மாளிகைக்காட்டில் முன்னெடுக்கப்பட்டது.