நேபாளத்தில் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை உயர்வு!
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 29 பேரைக் காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும் அங்கு தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.