நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

🟢மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். நெல்லிக்காய் நீண்ட காலமாக ஆயுர்வேத வைத்தியத்தின் அடிப்படை அங்கமாக உள்ளது. அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக மதிப்பிடப்படுகிறது. பாரம்பரியமாக நெல்லிக்காய் ஊறுகாய் அல்லது மிட்டாய் வடிவங்களில் சுவைக்கப்படுகிறது. நெல்லிக்காய் தூளாகவும் அல்லது சாறு வடிவிலும் அடிக்கடி கிடைக்கிறது. அந்தவகையில் நெல்லிக்காய் ஜூஸினால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்துகொள்ளலாம்.

🍈வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் அது உங்கள் உடல் அமைப்பில் உள் நச்சுத்தன்மையை நீக்கும். நெல்லிக்காய் ஜூஸில் தண்ணீர் உள்ளது, இது அதிக சிறுநீர் உற்பத்திக்கு உதவும். அதிகப்படியான சிறுநீர் ஓட்டம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும், சிறுநீரக கற்களை அகற்றவும் உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் ஜூஸ் சிறுநீர் தொற்றுகளையும் குறைக்கும்.

🍈நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.

🍈நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.
🍈வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் பலப்படுத்தும் ஒரு வைட்டமின் ஆகும். நெல்லிக்காயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல எட்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தடுப்பதற்கும் உதவுகிறது.
🍈நெல்லிக்காய் உடலில் உள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்யும். மேலும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கும்.
🍈எலும்பு உறிஞ்சிகள் ஒரு வகையான செல்கள். இலை எலும்புகளை எளிதில் உடையச் செய்யும். ஆனால் நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகினால், இந்த செல்களின் அளவு குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
🍈 காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், நாள் முழுவதும் அதிக ஊட்டச்சத்தும் ஆற்றலும் கிடைக்கும். நெல்லிக்காய் ஜூஸை ஒரு எனர்ஜி பூஸ்டர் அல்லது எனர்ஜி ட்ரின்ங் என்றே கூறலாம். அது அப்படிதான் செயல்படுகிறது, நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும்.

 

🍈முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ் பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்