நெடுந்தீவு இளைஞன் கொலை : சந்தேகநபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவு இளைஞன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பொலிஸார் தேடி வருகின்ற நிலையில், ஒரு சந்தேக நபர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்

இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஏனைய மூன்று சந்தேக நபர்களையும் தேடி கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்