நுவரெலியாவில் வெள்ளத்தில் மூழ்கிய விக்டோரியா பூங்கா!
-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது
இதில் நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான விக்டோரியா பூங்கா மற்றும் அதனை அன்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விக்டோரியா பூங்காவில் சிறுவர் பூங்கா பகுதிக்கு உட் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குறித்த சிறுவர் பூங்கா குளமாக மாறி உள்ளது
அத்தோடு சிறுவர்கள் விளையாடும் இடம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகின்றது, மேலும் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் மற்றும் மாநகரசபையினால் பராமரிப்பு செய்து வந்த மலர் தோட்டங்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது .