Last updated on November 23rd, 2024 at 12:11 pm

நுவரெலியாவில் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

நுவரெலியாவில் பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிராக வழக்கு தொடர தீர்மானம்

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா கோல்ப் மைதானத்தில் மிகப் பழமையான 31 மரங்களை அழிக்க முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக முறையான விசாரணைகள் மேற்கொண்டு வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது என நுவரெலியா பிரதேச செயலாளர் டீ,ஏ,பீ தலன்சூரிய தெரிவித்தார்.

நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான குறித்த வளாகத்தை கோல்ப் ஹோட்டலுக்கு குத்தகை முறையில் வழங்கப்பட்டுள்ளது

எனினும் குறித்த பகுதியில் உள்ள மரங்களை அகற்றி புதிய கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் ,மரங்களினால் அதிக இலைகள் கீழே விழுவதாகவும் கூறி நன்கு வளர்ச்சியடைந்த 31 மரங்களில் அடிப்பகுதியில் உள்ள தோல்களை அகற்றி மரங்கள் பட்டுப்போவதற்கு தார் மற்றும் சில இராசாயனத்தை கலந்து பூசப்பட்ட்டுள்ளதாகவும் குறித்த மரங்கள் மீண்டும் துளிர்க்க வாய்ப்பில்லை எனவும் வியாழக்கிழமை குறித்து பகுதிக்கு சென்று உயர் அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு தெரிவித்தனர்.

எனினும் குறித்த மரங்களை அகற்றுவதற்கு முன்னதாக கடிதம் மூலம் அனுமதி கேட்கப்பட்டதாகவும் இதனை மறுத்து மரங்களை வெட்டினால் அபராதம் விதிக்கப்படும் என குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதன் காரணமாகவே சூட்சுமமான முறையில் மரங்களை அகற்றுவதற்கு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணம் நுவரெலியா மாநகர சபை , பிரதேச செயலகம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என இணைந்து ஹோட்டல் உரிமையாளர் சில சட்டங்களை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டமையால் விசாரணைகளை மேற்கொண்டு ஹோட்டல் உரிமையாளருக்கு எதிராக உச்ச நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நுவரெலியா பிரதேச செயலாளர் டீ,ஏ,பீ தலன்சூரிய தெரிவித்தார்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்