நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

பலத்த மழையுடன் கூடிய வானிலையால் 73 பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்பது நீர்த்தேக்கங்கள் வான் பாய ஆரம்பித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, பதலகொடை, தெதுரு ஓயா, எல்லேவெல, கேகனதுர, இராஜாங்கனை, தப்போவ, வான் எல, வீரவில மற்றும் யோதவெவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மேல், தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்கள் உட்பட 15 மாவட்டங்களுக்கு கடும் இடி, மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் லேசான மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்