
நீர்கொழும்பில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி இளைஞர்!
நீர்கொழும்பு, எத்துகல பகுதியில் நேற்று திங்கட்கிழமை 35.56 கிலோ கஞ்சா வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், 21 வயது இளைஞரை, நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், கைது செய்தனர்.
அத்துடன், சந்தேக நபருக்கு கஞ்சாவை மறைத்து வைக்க, வீடு வழங்கி உதவியதற்காக, 50 வயதுடைய பெண்ணையும் அவர்கள் கைது செய்தனர்.
சந்தேக நபரான இளைஞர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும், கைது செய்யப்பட்ட பெண் கொச்சிக்கடையைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்