
நீரில் மூழ்கும் மட்டக்களப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி, பெரிய போரை தீவு, பட்டிருப்பு, குருமண்வெளி, எருவில், ஓந்தாச்சிமடம் போன்ற பகுதிகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி இவ்வாறு காணப்படுகின்றது.