நீரில் மூழ்கிய அக்குரணை நகரம்

கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் உள்ள அக்குரணை நகரம் நீரில் மூழ்கியுள்ளது.

அக்குரணை நகரின் ஊடாக பாயும் பிரதான ஓயா மற்றும் வஹகல ஓயா பெருக்கெடுத்து ஓடுவதால் அக்குரணை நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியதுடன் ஹத்தே கன்வான, குடுகல மற்றும் ஏனைய பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

கண்டி – யாழ்ப்பாணம் ஏ 09 வீதியில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அந்த வீதியின் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.

அக்குரணை நகரின் பிரதான ஓயா மற்றும் வஹகல ஓயா என்பன நிரம்பி வழிவதால் வருடத்திற்கு பல தடவைகள் அக்குறணை நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழமையான நிலைமையாக மாறியுள்ளது.