
நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
அம்பாறை – தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ் வாவியில் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய அரச புலனாய்வு சேவை தலைமை அலுவலகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த நபரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.