நில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்வு
நில்வளா கங்கையின் நீர்மட்டம் சில பகுதிகளில் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பாணாதுகம மற்றும் தல்கஹகொட ஆகிய பகுதியில் சிறியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, நில்வளா கங்கையை அண்டிய தாழ்நிலப்குதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.