நிலவும் சீரற்ற காலநிலை: மேலும் இரண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நடைபெறவிருந்த இரண்டு பரீட்சைகள் பிற்படப்பட்டுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ஆம் மற்றும் 2ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த சட்டக்கல்லூரி பொது நுழைவுத் தேர்வும், மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தொடர்பான பரீட்சையும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.