நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி
பங்களாதேஷத்தில் தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.
டாக்காவிலிருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள ஏதிலிகள் முகாமில் இந்நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்நிலச்சரிவு காரணமாக முகாமில் உள்ள 3 குடிசைகள் அழிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆபத்தான சரிவுகளில் வசிப்பவர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்