நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் மீது முச்சக்கர வண்டி மோதி இருவர் படுகாயம்

-யாழ் நிருபர்-

நேற்று இரவு மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளை வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லான்ட்மாஸ்டர் மீது முச்சக்கர வண்டி மோதியதால் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த தம்பதிகள் இருவர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புகையிலை ஏற்றி வந்த லான்ட் மாஸ்டரை, சமிக்ஞை விளக்கு போடாமல் வீதியில் நிறுத்தி வைத்திருந்ததால் வீதியில் வந்த முச்சக்கர வண்டி மோதியது.

இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த தம்பதிகள் படுகாயமடைந்ததால் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டிமூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லான்ட்மாஸ்டரானது பொறுப்பற்ற விதத்தில் வீதியில் நிறுத்தியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.