நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

187 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்