நிந்தவூர் பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் லத்தீப் ஏற்பாட்டில், பிரதேச அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதன் போது, நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறித்து கிராம சேவையாளர்களிடம் கேட்டறியப்பட்டிருந்தது.
வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான காரணமாக, குடியிருப்பு காணிகளை விடவும் வீதிகள் உயரமாக அமைக்கப்பட்டிருப்பது அடையாளப்படுத்தப்பட்டது, அதே போல வடிகான் துப்பரவு பணிகள் முழுமையடையாமையும் நீர் வழிந்தோடாமைக்கான காரணங்களுள் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
இனிவரும் காலங்களில் அனர்த்தத்தின் போதான முன்னாயத்த திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
விவசாயிகளின் வயல்கானி அழிவுகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார பாதிப்புக்கள் குறித்தும் அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், ஏ. ஆதம்பாவா, எம்.எஸ். உதுமா லெவ்வை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றியாஸ், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி, நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.