நா.உ செல்வராசா கஜேந்திரன் தாக்குதல் தொடர்பில் பல விமர்சனங்கள்

திருகோணமலையில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதுல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழர் பகுதிகளில் கடும் கண்டனங்கள் எழுந்தது.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு அரசியல் பரப்பில் உள்ளவர்கள் பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

நாடாளுமன்றத்திலும் தமிழ் அரசியல்வாதிகள் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை இச்சம்பவம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்த போது செந்தில் தொண்டமான் ஊடக சந்தப்பொன்றை ஏற்படுத்தியிருந்தார்

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டுள்ளதாக தெரிவித்தார். சிங்கள மக்களின் பிரதேசத்தை ஊடறுத்து தியாகி திலீபனின் நினைவேந்தல் ஊர்தியை கொண்டு செல்ல முன் பொலிஸாரிடம் அனுமதி பெறாதது ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளதை காட்டுவதாக ஆளுநர் செந்தில் தொண்டமான தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு தமிழ் கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்த போதும் சில தமிழ் கட்சிகளை சார்ந்த சமூக ஊடக போராளிகள் என தங்களை காட்டிக்கொள்ளும் சிலர் மோசமான விமர்சனங்களை முன்வைத்திருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.